வாடிக்கையாளர்களின் சிறந்த நலன்களுக்கான அதன் நீண்டகால அர்ப்பணிப்பினை பிரதிபலிக்கும் முகமாக, HUTCH இன்றைய தினம் மேலுமொரு முக்கிய முயற்சியினை அறிமுகப்படுத்தியது. COVID-19 நெருக்கடியில் நாடு சிக்கியுள்ள நிலையில் தொலைத்தொடர்பு சேவைகளுக்கான தொடர்ச்சியையும், அணுகலையும் இதன் மூலம் உறுதி செய்கிறது.
இந்த புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள முயற்சியானது, 078 மற்றும் 072 முற்கொடுப்பனவு வாடிக்கையாளர்களுக்கு, அவர்களது கணக்கு மீதி முடிவடையும் போது ரூபா. 15 ஐ நாளாந்த இலவச நிவாரண ரீலோட்டாக வழங்குகின்றது. இந்த நிவாரண ரீலோட்டை anytime டேட்டாவாக, எந்தவொரு வலையமைப்புக்குமான அழைப்பாக மற்றும் எஸ்.எம்.எஸ் சேவைகளுக்காக உபயோகிக்க முடியும்.
இலங்கை மக்களிடையே COVID-19 வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த நடைமுறையில் உள்ள கடுமையான ஊரடங்கு நிலைமையினால், பல சந்தாதாரர்கள் தங்கள் கணக்குகளை ரீலோட் செய்வதில் சிரமங்களை எதிர்நோக்கியிருக்கலாம். இந்த இடைக்கால சலுகையானது அனைத்து Hutch முற்கொடுப்பனவு வாடிக்கையாளர்களும் தற்போதைய முடக்கல் நிலையில் தொடர்ந்து இணைந்திருக்க உதவும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டது. வாடிக்கையாளர்கள் தங்கள் Hutch இணைப்பில் தினமும் *288# ஐ டயல் செய்வதன் மூலம் இந்த இலவச நிவாரண ரீலோட்டைப் பெறலாம். இந்த சேவை மார்ச் 26 முதல் 2020 மார்ச் 31 வரை வழங்கப்படுகின்றது.
“பல முற்கொடுப்பனவு சந்தாதாரர்களுக்கு தங்கள் போன்களை வழக்கமான முறைகளைப் பயன்படுத்தி ரீலோட் செய்வது கடினமாக உள்ளதை நாம் இணங்கண்டுள்ளோம். மேலும் அவர்களுக்கு ஒன்லைன் முறை மூலமாகவும் ரீலோட் மேற்கொள்ளக் கூடிய வசதி இல்லாமல் இருக்கலாம். இந்த நிவாரண ரீலோட் முற்றிலும் இலவசம். இது கடன் அல்ல, வாடிக்கையாளர்கள் அதை திருப்பிச் செலுத்துவது குறித்து கவலைப்பட தேவையில்லை. இந்த அனுகூலமானது, எங்கள் வாடிக்கையாளர்கள் வீட்டில் பாதுகாப்பாக இருந்த வண்ணம், தற்போதைய சூழ்நிலையைப் பற்றி எல்லா நேரங்களிலும் அறிந்து வைத்துக்கொள்ளும் பொருட்டு தடையற்ற இணைப்பைக் கொண்டிருக்க உதவுமென நாம் நம்புகின்றோம். இந்த முயற்சிக்கு உடனடியாக உதவியளித்த TRCSL இற்கு நாம் நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றோம்” என HUTCH இன் பிரதான நிறைவேற்று அதிகாரி, திருக்குமார் நடராசா தெரிவித்தார்.
இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணையகத்துடன் (TRCSL) நெருக்கமாக இணைந்து, Hutch நிறுவனம் COVID – 19 வைரஸுக்கு எதிராகப் போராடுவதற்கு, மக்களை வலுவாகவும், பாதுகாப்பாகவும் இருப்பதற்கு ஊக்குவிக்கும் பொருட்டு பல சரியான மற்றும் கட்டுப்படியாகும் முயற்சிகளை ‘வீட்டில் இருந்து வேலை செய்வோம்’ என்ற தொனிப்பொருளின் கீழ் முன்னெடுத்துள்ளது. இது கால அடிப்படையிலான எல்லையற்ற இணையம் மற்றும் யுடியூப் பக்கேஜ்கள், anytime டேட்டா பொதிகள், மேம்படுத்தப்பட்ட எயார்டைம் கடன்கள் நீட்டிப்பு, மாற்று இலத்திரனியல் ரீசார்ஜிங் சேனல்கள், புதிய OTT அடிப்படையிலான வாடிக்கையாளர் சேவை சேனல்கள் மற்றும் பல்கலைக்கழக eLearn சேவைகளுக்கான இலவச அனுமதி என பல வசதிகளை உள்ளடக்கியுள்ளது. ‘வீட்டிலிருந்து வேலை செய்வோம்’ என்ற முயற்சி தொடர்பில் மேலதிக தகவல்களை www.hutch.lk. என்ற இணைய முகவரியிலிருந்து பெற்றுக்கொள்ள முடியும்.
Leave a Reply