புதிய இயல்பு நிலைக்கு முகங்கொடுக்க உதவும் Dell தொழிநுட்பங்கள்

  • வீட்டிலிருந்து கற்கும் புதிய முறைமையை ஊக்குவிக்கும் தனித்துவமான மாணவர் சலுகைகள்.
  • 10ம் தலைமுறை Intel® Core™ processor மற்றும் பலவகைப்பட்ட புதிய பாகங்களினாலும் வலுவூட்டப்படும் Dell Inspiron 15 5593 மற்றும் Dell Inspiron 14 5491 மடிக்கணனிகளையும், tablet பயன்பாட்டு முறைகளையும் அறிமுகப்படுத்துகின்றது

வாடிக்கையாளர்களுக்கு சௌகரியம், வலுவான செயல்திறன், அழகிய வடிவமைப்பு மற்றும் தமது வாழ்க்கைமுறைக்கேற்ற வகையில் தனிப்பட்ட பாவனைக் கணினிகளை (PC) விரும்புகின்றனர் என்பதை Dell Technologies தெளிவாக செவிமடுத்து அறிந்து கொண்டுள்ளது. தற்போது உலகமெங்கும் நடைமுறையில் உள்ள, செயற்திறன் மிக்க வீட்டிலிருந்தபடியே வேலை செய்யும் மாதிரியை இலகுவாக்கக் கூடிய அத்தியாவசியங்களை இந் நிறுவனம் அண்மையில் அறிமுகப்படுத்தியது. மாறிவரும் நுகர்வோர் வடிவங்களுக்குப் பொருத்தமான தயாரிப்புக்களை வழங்கும் தனது தொடர்ச்சியான முயற்சியில் ஈடுபட்டுள்ள Dell, வீட்டிலிருந்து வேலை செய்தல் (WFH) தீர்வுகள் மற்றும் வீட்டிலிருந்தே கற்றலுக்கான (LFH) புத்தம் புதிய கருத்தோட்டத்தை சாத்தியமாக்கியுள்ளது. தயாரிப்புகள் தொடர்பில் அதிகரித்தும் கேள்விகளை நன்கு புரிந்துகொண்டுள்ள Dell சிறந்த ஈடுபாடு, இடைத்தொடர்பு மற்றும் தடையின்றிய பாவனையாளர் அனுபவத்தை வழங்குகின்றது.

புதிய வீட்டிலிருந்தான கற்கை முறைமைக்கு தம்மை பழக்கப்படுத்தி வரும்  பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பாடசாலைச் சிறார்களின் கல்வியை தரமுயர்த்துவதற்கு Dell தனது ஆதரவைத் தொடர்ந்தும் இலங்கையிலே விரிவுபடுத்திக் கொண்டுள்ளது. எந்த தடையுமின்றி, வசதியுடன் வீட்டிலிருந்தபடியே தமது கற்றலை மாணவர் சமூகம் தொடர்வதனை வலுவூட்டுவதற்காக Dell தனது மடிக்கணனிகள் மற்றும் உபகரணங்களுக்கு விஷேட விலைக்கழிவுகளை வழங்குகின்றது.

“இந்த வீட்டிலிருந்தே வேலை மற்றும் வீட்டிலிருந்தே கற்றலுக்கான காலப்பகுதிக்கான பன்முகப்படுத்தப்பட்ட தேவைகளுக்குப் பொருத்தமானவாறு எமது தயாரிப்பு வரிசைகள் அமையப்பெற்றுள்ளன. இக்காலகட்டத்தில் தடையற்ற இணைப்பு அவசியமாகவுள்ளதுடன், புதிய இயல்பு நிலையை நோக்கி நாம் எம்மை பழக்கப்படுத்திக்கொள்வதை இம்மாதிரிகள் உறுதிசெய்கின்றன.

தொழில்புரிபவர்கள் மற்றும் மாணவர்களுக்கு அவசியமான வசதிகளை வழங்குவதில் மகிழ்ச்சியடைவதுடன், Dell தயாரிப்புக்களுக்கு விஷேட விலைக்கழிவுகளை வழங்கும் முயற்சியை ஆதரிப்பதிலும் உறுதியாக உள்ளோம்,” என  Dell EMC இன் இலங்கை மற்றும் மாலைதீவிற்கான முகாமையாளர் திரு. கிறிஷான் பெர்னாண்டோ தெரிவித்தார்.

Dell Inspiron 15 5593 மடிக்கணனியானது 10ம் தலைமுறை Intel® Core™ processor இனால் வலுப்படுத்தப்படுவதோடு, i5 மற்றும் i7 மாதிரிகளிலும் கிடைக்கின்றது. அலுவலக வேலைகளைத் தடையின்றி புரிவதற்கான சக்தியைக் கொண்டதுடன், 16GB DDR4 memory மற்றும் 512 GB SSD storage ஐயும் இந்த 15 அங்குல மடிக்கணனி கொண்டுள்ளது. இந்த நம்பமுடியாத responsiveness ஐயும், சீராக பல பணிகளில் இயங்கும் தன்மையையும், இந்த மடிக்கணனி வழங்குகின்றது.

Dell Inspiron 14 5491 ஆனது, மடிக்கணனி பயன்முறையையும், tablet பயன்முறைக்கும் ஏற்ற பல்துறை வடிவமைப்பை ஒருங்கிணைக்கின்றது. 14 அங்குல two in one மடிக்கணனியானது, 10ம் தலைமுறை  Intel® Core™ processor இனால் வலுப்படுத்தப்பட்டுள்ளதோடு, i5 மற்றும் i7 மாதிரிகளிலும் கிடைக்கின்றது. இந்த மடிக்கணனியானது முழுமையான சௌகரியத்தை வழங்குவதுடன், அதன் மடிக்கணனி பயன்முறையானது டைப்பிங் பயன்பாடுகளுக்காகவும், tablet பயன்முறையில் உள்ள போது active pen மூலம் வரைதல் மற்றும் எழுதுதல் பயன்பாடுகளுக்காகவும் உருவாக்கப்பட்டுள்ளது. 16GB DDR4 memory & 512GB SSD storage ஆகியன இணைந்து அலுவலகப் பணிகளிலும் கற்றல் தேவைகளிலும் தடையின்றிய அனுபவத்தை வழங்குகின்றது.

இவ்விரு மடிக்கணனிகளும், தடையின்றிய PC மற்றும் smartphone ஒருங்கிணைப்புக்கு வழிவகுக்கும் Dell mobile இணைப்பு அம்சத்தை ஆதரிக்கின்றது. இது பாவனையாளர்கள் தமது ஸ்மார்ட்போன் திரையை, மடிக்கணனியில் பிரதிபலிக்க வழிவகுப்பதன் மூலம், அழைப்புக்களை மேற்கொள்ளவும், messagesஐ பார்வையிடவும், அனுப்பவும்,  ஸ்மார்ட்போன் செயலிகளை மடிக்கணனி ஊடாகவே அணுகவும் வழிவகுக்கின்றது. புகைப்படங்கள், வீடியோக்கள், ஓடியோக்கள் மற்றும் கோப்புக்களை Mobile connect மூலம் ஸ்மார்ட்போன் மற்றும் மடிக்கணனி என்பற்றில் ஒன்றிலிருந்து ஒன்றுக்கு பரிமாறிக்கொள்ள வழிவகுக்கின்றது. இது ஸ்மார்ட்போன் notifications தொடர்பில் கவலையின்றி, வீட்டிலிருந்து வேலை செய்யும்போது வேலையிலேயே கவனம் செலுத்துவதற்கு ஏற்ற தெரிவாகவுள்ளது. ஸ்மார்ட்போன் திரையை மடிக்கணனியில் பிரதிபலிப்பதன் காரணமாக, வேலை செய்யும்போது ஒரு கருவியுடன் பாவனையாளர் இணைந்திருக்கக்கூடியதாக உள்ளதால், கவனச்சிதறல்களை குறைத்துக்கொள்ளக்கூடியதாக உள்ளது.

தடையின்றி வீட்டிலிருந்து வேலை செய்யும் அனுபவத்தை வழங்குகின்ற துணைக் கருவிகளை உள்ளடக்கியதாக Dellன் புத்தாக்க தயாரிப்பு வரிசை உள்ளது. அதியுச்ச ஒலி அனுபவம், கவனச்சிதறலின்றிய கம்பியற்ற mouse வகைகள் மற்றும் TV, Ethernet, தெளிவான தொடர்பாடலுக்கான USB handsets போன்ற பல்வேறு கருவிகளை இணைத்துக்கொள்ள உதவும் USB Type C adapter யாவும் பாவனையாளர்கள் எங்கும், எவ்வேளையிலும் தாம் வேலை செய்யவோ/ கற்கவோ கூடிய சூழலில் அவர்களை சூழ்ந்திருக்கும்.

AC511M-Dell Stereo soundbar, AE515M-Dell Pro Stereo Soundhar, Dell optical wireless mouse, MS-3220-Dell Later Wired Mouse, MS3220W-Dell Mobile Wireless Mouse, Dell DA300 Adapter-USB type C to HDMI/VGA/DP/Ethernet/USB-C/USB-A, DA200 Adapter USB type C to HDMI/VGA/DP/Ethernet/USB 3.0 மற்றும் UC510 Dell Pro Stereo Headset போன்றவை இத் துணைக் கருவிகளில் உள்ளடங்குகின்றன.

Dell Technologies தொடர்பான விபரங்கள்

Dell Technologies (NYSE:DELL) ஆனது நிறுவனங்களும், தனிநபர்களும் தமது டிஜிட்டல் எதிர்காலத்தைக் கட்டியெழுப்பி, தாங்கள் பணியாற்றுகின்ற, வாழ்கின்ற மற்றும் விளையாடி மகிழ்கின்ற பாணியை முற்றிலும் மாற்றியமைப்பதற்கு உதவுகின்ற வர்த்தகங்களை உள்ளடக்கிய ஒரு தனித்துவமான நிறுவன குடும்பமாகும். Edge, core மற்றும் cloud என தொழிற்துறையில் மிகவும் விரிவான மற்றும் புத்தாக்கமான தொழில்நுட்பம் மற்றும் சேவைகளை தனது வாடிக்கையாளர்களுக்கு இந்நிறுவனம் வழங்கி வருகின்றது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*