உலகின் முன்னணி ஸ்மார்ட்போன் வர்த்தகநாமமான vivo, இலங்கையில் தனது புத்தம் புதிய V20 தொடரின் புதிய ஸ்மார்ட்போனான vivo V20 SEஐ அறிமுகம் செய்வதாக இன்று அறிவித்தது. நுகர்வோரை மையமாகக் கொண்ட அம்சங்களை வழங்குவதற்கான அதன் அர்ப்பணிப்பை மேலும் வலுப்படுத்தும் முகமாக vivo V20 தொடர் தொழில்துறையின் சிறந்த கெமரா தொழில்நுட்பம், எதிர்கால வடிவமைப்பு மற்றும் சக்திவாய்ந்த முழுமையான செயல்திறனை வழங்குகிறது. புதிய vivo V20 SE இளம், வளர்ந்த, நவ நாகரிகத்தின் ஆர்வமுள்ள நுகர்வோரின் வாழ்க்கை முறைகளை முழுமையாக்குகின்றது.
V20 SE, Aura Screen Light உடன் கூடிய புதுமையான 32 MP Super Night Selfie camera வினைக் கொண்டுள்ளதுடன், இது இரவு நேரங்கள் மற்றும் இருள் நிறைந்த சூழ்நிலைகளில் கூட வாழ்வின் சிறப்பான தருணங்களை தெளிவாகவும், சிறப்பாகவும் படம் பிடிக்க அனுமதிக்கின்றது. இந்த ஸ்மார்ட்போனானது கையில் பிடிப்பதற்கு சௌகரியமான மிக நேர்த்தியான வடிவமைப்பைக் கொண்டுள்ளதன் மூலம் பாவனையாளரின் சுவை மற்றும் வாழ்க்கை முறைக்கு ஏற்றதாக உள்ளது. இந்த சாதனம் 7.83mm 3D உடலுடன் மெலிதான மற்றும் குறைந்த எடை கொண்டதுடன், ஒருவரின் தனிப்பட்ட பாணிக்கு ஏற்றவாறு அழகான தோற்றத்தை அளிக்க அண்மைய நவ நாகரிக கூறுகளை ஒருங்கிணைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனாது 33W FlashCharge தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளதுடன், ஒருநாள் முழுவதுமான சிக்கலின்றிய பாவனையை வழங்குகின்றது.
“vivoவில், நாங்கள் தொடர்ந்து நுகர்வோர் விருப்பங்களை ஆராய்ந்து, நுகர்வோரை மனதில் வைத்து அர்த்தமுள்ள கண்டுபிடிப்புகளை கொண்டு வருகிறோம். நுகர்வோர் தேவைகளைப் பற்றிய எங்கள் ஆழமான நுண்ணறிவுகளின் தொடர்ச்சியாக, V20SE இந்தப் பிரிவில் சிறந்த கெமரா தொழில்நுட்பத்தை வழங்குவதற்காக உருவாக்கப்பட்டுள்ளதுடன், இது நேர்த்தியான சாதனமாக மலிவு விலையில் கிடைக்கின்றது. செல்பி மோகம் மற்றும் அண்மைய புகைப்பட போக்குகளைக் கருத்தில் கொண்டு, புதிய வி V20 SE ஸ்மார்ட்போன் எங்கள் ஆயிரக்கணக்கான நுகர்வோருக்கு சிறந்ததை வழங்குவதற்கான எங்கள் தொடர்ச்சியான முயற்சியின் சிறந்த உதாரணமாகும்,” என்று vivo Sri Lanka வின் பிரதான நிறைவேற்று தலைமை நிர்வாக அதிகாரி கெவின் ஜியாங் தெரிவித்தார்.
vivo V20 SE, 32MP முன்பக்க கெமராவுடன் வருகிறது, இது துள்ளியமான தெளிவை வழங்குவதுடன், விலைமதிப்பற்ற வாழ்க்கை தருணங்களை படம் பிடிக்கும் போது சிக்கலான விவரங்களை பாதுகாக்கிறது. சூப்பர் நைட் செல்பியின் மேம்பட்ட அம்சமானது ஸ்டூடியோ-தரமான அனுபவத்தைப் பெற தொழில்சார் தரத்திலான இரவு காட்சி கெமரா பயன்முறையை வழங்குகிறது. இந்த அறிவார்ந்த தொழில்நுட்பம் இருண்ட புள்ளிகளை பிரகாசமாக்குவதுடன், அதிக பிரகாசம், தெளிவு மற்றும் சமநிலைக்கான சிறப்பம்சங்களில் அதிகப்படியான வெளிப்பாட்டைக் குறைக்கிறது. Aura Screen Light என்பது ஒரு சிறப்பு vivo கருவியாகும், இது உட்புறத்திலும் வெளிப்புறத்திலும் சுற்றுப்புற ஒளியுடன் தானாக சரிசெய்து கொள்வதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சமானது Multi-Style Potrait, AI Face Beauty மற்றும் Potrait Mode ஆகியவற்றை உள்ளடக்குகின்றது, இது எந்தவொரு முயற்சியும் இன்றி கவர்ச்சியாக தோற்றமளிக்கச் உதவும்.
அசர வைக்கும் 48MP பின்புற கெமராவானது புகைப்பட ஆர்வலர்கள், Super Night Mode, Super Wide Angle, Super Macro, Ultra Stable Video மற்றும் Video Face Beauty போன்ற சக்திவாய்ந்த அம்சத்தைப் பயன்படுத்தி நகர விளக்குகள் முதல் இருண்ட வான் வரையானவற்றை தெளிவாக படம் பிடிக்க உதவுவதுடன், இப்போது அசலாக தோற்றமளிக்கும் படங்கள் அல்லது வீடியோக்களை எந்த சிறு விபரத்தையேனும் இழக்காமல் Super Wide-Angle மற்றும் Super Macro mode பயன்முறையில் படம் பிடிப்பது மிகவும் உற்சாகமளிப்பதாகவுள்ளது.
கிரவிட்டி பிளக் (Gravity Black) மற்றும் ஒக்சிஜன் புளூ (Oxygen Blue) ஆகிய இரண்டு பிரகாசமான நிறங்களில் இது கிடைக்கின்றது. vivo V20 SE, 6.44-inch (16.37cm) 1080P AMOLED Halo FullView™ திரையைக் கொண்டதுடன், இது பிரகாசமான, அசல் வண்ணங்களை உயிரோட்டமாக கொண்டு வருகின்றது. இது 16 மில்லியனுக்கும் அதிகமான கலப்பு வண்ண நிழல்களைக் காட்சிப்படுத்துவதுடன், சுற்றுப்புற நிலைமைகளுக்கு தானாக இசைவாக்கி, நீங்கள் பார்க்கும் அனைத்தையும் மிகவும் அற்புதமாக்குகிறது. இதன் திரையினுள் அமைந்த கைரேகை ஸ்கேனிங் திரையை லேசாகத் தொடுவதன் மூலம் செயல்படுகின்றது.
V20 SE, Qualcomm® Snapdragon™ 665 புரசசரினால் வலுவூட்டப்படுவதுடன், இதன் 8GB RAM மற்றும் 128GB ROM சீரான செயற்பாட்டினை அப்ளிகேஷன்களுக்கும், கேம்ஸ்களுக்கும் வழங்குகின்றது. இதன் 4,100mAh மின்கலமானது 33W FlashCharge தொழில்நுட்பத்துடன் வருகின்றமையால், 50% அதிக வேகத்தில் மின்னேற்ற உதவுடவதுடன், 1 மணித்தியாலத்தில் முழுமையாக போனை சார்ஜ் செய்துகொள்ள முடியும். மேலும், இதன் குறிப்பிடத்தக்க மற்றுமொரு சிறப்பம்சம் Turbo தொழில்நுட்பத்தால் மேம்படுத்தப்பட்ட Multi Turbo ஆகும். இது மென்பொருள் மற்றும் வன்பொருளை மேம்படுத்தி ஒட்டுமொத்த செயற்பாட்டையும் வேகமாக்குகின்றது.
V20 SE ஐ Abans, Dialog, Singhagiri விற்பனையகங்கள் மற்றும் நாடுபூராகவும் உள்ள vivoவினால் அங்கீகாரமளிக்கப்பட்ட விநியோகஸ்தர்களிடம் ரூபா 57,990 என்ற விலையில் பெற்றுக்கொள்ள முடியும். மேலும், V20 SE ஐ கொள்வனவு செய்பவர்களுக்கு Dialog இடமிருந்து 40GB anytime data bundle இலவசமாக கிடைப்பதுடன், இது நவம்பர் 15 ஆம் திகதியிலிருந்து 2 மாதங்களுக்கு (மாதாந்தம் 20GB) செல்லுபடியாகும்.
Leave a Reply