- உலகின் மிகப் பிரபலமான ஓடியோ ஸ்ட்ரீமிங் சந்தா சேவையான Spotify தற்போது இலங்கையில் உள்ள பயனர்களுக்கும் இலவசமாகக் கிடைக்கிறது
- தனிப்பயனாக்கப்பட்ட இசை பரிந்துரைகள், புதிய இசை தேடல்கள், 70 மில்லியன் பாடல்கள், 4 பில்லியன் பிளேலிஸ்ட்களை அனுபவித்து மகிழலாம்
- உள்ளூர் மட்ட பிளேலிஸ்ட்களுடன் ஆரம்பம்
– உலகின் மிகவும் பிரபலமான ஓடியோ ஸ்ட்ரீமிங் சந்தா சேவையான Spotify, பங்களாதேஷ், பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகளில் இன்று (23) உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்படுகிறது. Spotify உங்கள் தனிப்பட்ட இரசனைக்கு ஏற்ப ஒரு புரட்சிகர இசை அனுபவத்தை வழங்குகிறது. உலகளாவிய ரீதியில் 155 மில்லியனுக்கும் அதிகமான ப்ரீமியம் சந்தாதாரர்கள் உட்பட மாதாந்தம் 345 மில்லியனுக்கும் அதிகமான செயற்பாட்டிலுள்ள பயனர்களைக் கொண்ட Spotify, 70 மில்லியனுக்கும் அதிகமான பாடல்களைக் கொண்ட உள்ளூர் மற்றும் சர்வதேச இசைகளுடன் தனிப்பயனாக்கப்பட்ட அனுபவத்தை வழங்குகிறது. Spotify சேவையானது இலவசமாகவோ, அல்லது விளம்பர தடங்கல்கள் இன்றி இசையை இரசிக்கும் வகையிலான Spotify Premium மேம்படுத்தலுடனோ கிடைக்கின்ற சந்தா சேவையாகும்.
பயனர்கள் மாதத்திற்கு ரூ. 529 எனும் சந்தாவை செலுத்துவதன் மூலம் Spotify இன் உச்ச அனுபவமான, Spotify Premium இனை பெறலாம். Premium Family சந்தா திட்டம், குடும்பத்திலுள்ள 6 உறுப்பினர்களுக்கு, மாதத்திற்கு ரூ. 849 எனும் கட்டத்தில் கிடைக்கிறது. புதிய Spotify Premium DUO (மாதத்திற்கு ரூ. 679) ஆனது, ஒரே வீட்டில் வசிக்கும் இரண்டு நபர்களுக்கான சந்தா திட்டமாகும். இது எப்போதும் புதுப்பிக்கப்படும் Duo Mix பிளேலிஸ்ட்டை உள்ளடக்கியுள்ளது. அதாவது. இரண்டு சந்தாதாரர்களுக்கும், அவரவர் விரும்பும் ஓடியோக்களை அடையாளம் கண்டு அதனை வழங்குகிறது. மாணவர்களுக்கான Spotify Premium சந்தா திட்டமானது, மாதத்திற்கு ரூ. 265 எனும் கட்டணத்தில் கிடைக்கிறது. நேரடியான கட்டணப்பட்டியல் மூலமான சந்த செலுத்தலானது, Dialog, SLTMobitel, Hutch வலையமைப்பு மூலமாக கிடைக்கின்றன.
Spotify ஆனது, பல்வேறு எண்ணிலடங்கா அம்சங்கள் மற்றும் பரந்த அளவிலான சாதனங்கள் மற்றும் செயலிகளுக்கு ஒருங்கிணைந்து செயல்படும் வசதியுடன் இலங்கைக்கு வந்துள்ளது. இசை இரசிகர்கள், Spotify இன் தனிப்பயனாக்கப்பட்ட இசை பரிந்துரைகளான, உள்ளூர் மற்றும் சர்வதேச கலைஞர்களின் புதிய இசையை இரசிக்கவும், தேடவும், பகிரவும் உதவுகிறது.
Spotify இன் பிரதான ஃப்ரீமியம் வணிக அதிகாரி அலெக்ஸ் நோர்ஸ்ட்ரோம் (Chief Freemium Business Officer Alex Norström) இது தொடர்பில் தெரிவிக்கையில், “உலகெங்கிலும் உள்ள படைப்பாளர்களையும், நேயர்களையும் ஒன்றிணைக்கும் வாய்ப்பை உருவாக்கியுள்ளமை தொடர்பில் நாங்கள் மட்டற்ற உற்சாகத்தில் இருக்கிறோம். பல ஆண்டுகளாக நாம் எமது சர்வதேச எல்லைகளை விரிவுபடுத்தி வந்துள்ளதால், சுமார் ஒவ்வொரு கண்டத்திலும் 8 மில்லியனுக்கும் அதிகமான கலைஞர்களை அவர்களது நேயர்களுடன் இணைத்துள்ளோம். இது, உலகளாவிய ஓடியோ பொருளாதாரத்தின் மையத்தில் Spotify ஐ உறுதியாக வைத்திருக்க வழி வகுத்துள்ளது.” என்றார். “இப்புதிய சந்தைகளில் எமது நடவடிக்கைகளை ஆரம்பிப்பதானது, உண்மையான வரம்பற்ற இசை சூழல் தொகுதியை உருவாக்குவதற்கான எமது தற்போதைய உறுதிப்பாட்டை நிறைவேற்றுவதற்கான ஒரு முக்கிய அடுத்த படியாகும்.” என அவர் மேலும் தெரிவித்தார்.
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட தெற்காசிய சந்தைகளுக்கான இசை மற்றும் ஓடியோ நிபுணர்களின் குழுவை வழிநடத்தும், மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவுக்கான Spotify நிர்வாக பணிப்பாளர் கிளோடியஸ் பொல்லர் (Claudius Boller) தெரிவிக்கையில், “எமது நேயர்களின் வாழ்க்கையை வளப்படுத்த இசை எனும் பரிசை முடிந்தவரை பலருடன் பகிர்ந்து கொள்ள விரும்புவதோடு, உள்ளூர் கலைஞர்களுக்கு உலகளாவிய பயனர்களை அணுகக்கூடிய வாய்ப்பையும் வழங்குகிறோம்.” என்றார். “எமது இரசிகர்கள் இருக்கும் இடத்தில் நாம் எப்போதும் இருக்க விரும்புகிறோம். இந்த விரிவாக்கத்தின் மூலம், பங்களாதேஷ், பாகிஸ்தான், இலங்கையின் சத்தத்தை, உலகின் ஏனைய பகுதிகளுடன் பகிர்ந்து கொள்ளும் நோக்கத்தை நிறைவேறுவதற்கான விரிவுபடுத்தலை நாம் மேற்கொண்டுள்ளோம்.”
இலங்கைக்கான Playlists
Hot Hits Sri Lanka, Sinhala Rap-zillas, Sinhala Pop, Sinhala Lounging உள்ளிட்ட புதிய பிளேலிஸ்ட்கள் ஆனது, தினமும் உள்ளூர் இசை நிபுணர்களின் Spotify குழுவினரால் திறமையாக நிர்வகிக்கப்பட்டதும், தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டதுமான இசையை வழங்குகின்றன.
தனித்துவமான இசை பரிந்துரைகள் மற்றும் தேடல் அம்சங்கள்
Spotify சேவையின் ஒரு முக்கிய அம்சம் அதன் தனிப்பயனாக்கம் ஆகும். இது இரசிகர்கள் ஏற்கனவே விரும்பும் இசையை எளிதாகக் கண்டறிய அனுமதிப்பதோடு, புதிய இசைகள் மற்றும் கலைஞர்களை அவர்களின் சுவைக்கேற்பவும் கேட்கும் முறைகளின் அடிப்படையிலும் அவர்கள் விரும்புவதை கண்டறிய உதவுகிறது. புதிய பயனர்கள் Spotify இல் இணையும்போது, அவர் ஒரு ‘Taste Onboarding’ (‘டேஸ்ட் ஒன் போர்டிங்’ – நுழையும்போதான சுவை) செயன்றையின் மூலம் வழிநடத்தப்படுகிறார்கள். இதன் மூலம் Spotify அவர்களின் இசையின் சுவைகளுக்கான பரிந்துரைகளை விரைவாகத் தனிப்பயனாக்க உதவுகிறது.
Spotify யின் இசை பரிந்துரை என்ஜின் ஆனது, Daily Mix (நீங்கள் விரும்புவீர்கள் என நாம் நினைக்கும் புதிய பாடல்களுடன், உங்களுக்கு பிடித்த பாடல்களை இணைக்கும் ஆறு தனிப்பட்ட பிளேலிஸ்ட்கள்), Release Radar (நீங்கள் பின்பற்றுகின்ற மற்றும் விரும்பிக் கேட்கும் கலைஞர்களை அடிப்படையாகக் கொண்ட புதிய பாடல்களைக் கொண்டு தனிப்பயனாக்கப்பட்ட பிளேலிஸ்ட் – இது ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் புதுப்பிக்கப்படும்), Discover Weekly (உங்களது தனித்துவமான இசையை கேட்கும் பழக்கத்தின் அடிப்படையிலான பிளேலிஸ்ட்) உள்ளிட்ட தனிப்பயனாக்கப்பட்ட தேடல் அம்சங்களை, உள்ளூரைச் சேர்ந்த நேயர்கள் அனுபவிக்க அனுமதியளிக்கிறது.
Spotify இனால் மேலும் வழங்கப்படுபவை:
- Mood and genre hubs (மனநிலை மற்றும் வகை மையங்கள்): Workout, Chill, Party, Focus, Gaming, Sleep, Dinner, Kids உள்ளிட்ட பலவற்றை உள்ளடக்கிய பரந்த அளவிலான மையங்களில் இருந்து உலா வரும் தெரிவுகளை வழங்குகிறது.
- Play everywhere (அனைத்து தளங்களிலும் கேட்கலாம்) : கையடக்கத் தொலைபேசி, மடிகணனி, டெப்லெட்கள் போன்றவற்றில் Spotify செயலியைப் பதிவிறக்கலாம்.
- Listen everywhere (எங்கிருந்தும் கேளுங்கள்) : Instagram, Facebook, Samsung mobile & TV, Apple TV, Apple Watch, Chromecast, Google Maps, Fitbit உள்ளிட்ட பரந்தளவிலான சாதனங்கள் மற்றும் செயலி இணைப்புகளில் இணைவதற்கான சுதந்திரத்தை, Spotify அதன் நேயர்களுக்கு வழங்குகிறது.
- ப்ரீமியம் பயனர்களுக்கான Offline வசதி: நீங்கள் இணையத்துடன் இணையாதிருக்கும்போதிலும் கூட, ஒன்லைனில் இருக்கும்போது நீங்கள் விரும்பும் இசையை உங்கள் கையடக்க சாதனங்களில் அல்லது கணனியில் பதிவிறக்குங்கள்.
- ப்ரீமியம் பயனர்களுக்கு 320 kbps வரையான உயர் ஓடியோ தர இசை.
- Spotify For Artists (கலைஞர்களுக்கான Spotify): கலைஞர்கள், முகாமையாளர்கள், உரித்துரிமை கொண்டுள்ளவருக்கு (Record label), அவர்களது புதிய வெளியீடுகள் தொடர்பான புள்ளிவிபரங்களை நேரலையாக கண்காணிக்கவும், நேயர்களைப் புரிந்துகொள்ளவும், இரசிகர்களுடன் மேலும் ஆழமாக இணையவும், தமது விற்பனையை நடாத்தவும் உதவுகின்ற கருவிகளை இது வழங்குகிறது.
எதிர்வரும் நாட்களில், ஆசியா, ஆபிரிக்கா, கரீபியன், ஐரோப்பா, இலத்தீன் அமெரிக்கா ஆகிய வலயங்களிலுள்ள பல நாடுகளில் உள்ள இசை நேயர்கள், ஓடியோ உலகிற்கான உடனடி அணுகலை பெற முடியும் என்பதோடு, மிகவும் திறமையான படைப்பாளிகள் தங்களிடமுள்ள ஆர்வத்தை ஒரு தொழிலாக மாற்றுவதற்கான வாய்ப்பை இதன் மூலம் பெறுவார்கள்.
Spotify செயலியானது, இலவசமாக பதிவிறக்கம் செய்ய அல்லது Spotify Premium மேம்படுத்தலுடன் கிடைக்கிறது. நீங்கள் விரும்பும் வகையில் இசையை இரசிக்க, இன்றே Android அல்லது iOS செயலிகளின் சந்தை வழியாக அல்லது www.spotify.com/free இற்குச் செல்வதன் மூலம் Spotify செயலியை பதிவிறக்கலாம்.
Spotify இனை எவ்வாறு செயற்படுத்தி ஆரம்பிப்பது என்பது பற்றி மேலும் அறிய விரும்புகிறீர்களா? இங்கே கிளிக் செய்க.
###
Spotify Technology S.A. பற்றி
2008 ஆம் ஆண்டில் நாங்கள் Spotify இனை ஆரம்பித்தபோது, என்றென்றும் இசை கேட்கும் ஒன்றாக அது மாற்றமடைந்தது. படைப்பாற்றல் கொண்ட ஒரு மில்லியன் கலைஞர்களுக்கு, அவர்களின் கலையையும், பில்லியன் கணக்கான இரசிகர்களுக்கு, இப்படைப்பாளர்களை இரசிக்கவும், ஈர்க்கவும் வாய்ப்பளிப்பதன் மூலம் மனித படைப்பாற்றலின் திறனை திறந்து விடுவதே எமது நோக்கமாகும். நாங்கள் இவ்வாறு செய்யும் அனைத்து விடயங்களுக்கும், இசை மற்றும் ஒலிபரப்புகளின் மீது நாம் கொண்டுள்ள காதலே காரணமாகும்.
2.2 மில்லியனுக்கும் அதிகமான பொட்காஸ்ட்கள் உட்பட 70 மில்லியனுக்கும் அதிகமான பாடல்களை இலவசமாக தேடவும், நிர்வகிக்கவும், பகிரவும் முடிவதோடு, உயர் ஒலித் தரம் மற்றும் கேள்வி அதிகம் கொண்ட, இணைய வசதி இன்றிய செயற்பாடு (off-line), விளம்பர தடங்கலற்ற ஆகிய இசைக்கான பிரத்தியேக அம்சங்களைக் கொண்ட, Spotify Premium வசதியாக செயற்படுத்தவும்.
இன்று நாம், உலகளாவிய ரீதியில் 93 சந்தைகளில், 155 மில்லியன் Spotify Premium சந்தாதாரர்களுடன், 345 மில்லியனுக்கும் அதிகமான நேயர்களைக் கொண்ட சமூகத்துடன், உலகின் மிகவும் பிரபலமான ஓடியோ ஸ்ட்ரீமிங் சந்தா சேவை வழங்குனராக காணப்படுகின்றோம்.
எமது நிறுவன தகவல்களை வெளியிட, எங்கள் முதலீட்டாளர்கள் மற்றும் பதிவு வலைத்தளங்கள் அத்துடன் எமது முதலீட்டாளர்கள் வலைத்தளத்தின் “Resources – Social Media” பக்கத்தில் பட்டியலிடப்பட்டுள்ள ஏனைய சமூக வலைத்தளங்களையும் பயன்படுத்துகிறோம். மேலதிக தகவலுக்கு, படங்கள் அல்லது செய்திக் குழுவைத் தொடர்பு கொள்ள, https://newsroom.spotify.com/ இற்குச் செல்லவும்.
Leave a Reply