ஆரோக்கியம் தொடர்பில் மக்கள் அதிக கரிசனை கொண்டுள்ளதால், அடுத்த தலைமுறைக்குரிய ஸ்மார்ட் அணிகலன்களானவை, ஆரோக்கியமான மற்றும் சுகதேக வாழ்க்கைக்கு வழிவகுக்கிறது. இன்று, மக்கள் நேரத்தைக் அறிந்துகொள்வதற்காக மாத்திரம் கைக்கடிகாரத்தை பயன்படுத்துவதில்லை, காரணம் அதன் நோக்கம் தற்போது பரந்துபட்ட தாகி விட்டது. இது மிகவும் மேம்பட்ட அணிகலன்களுடன் முழுமையாக இணைக்கப்பட்ட அனுபவத்தை வழங்குகிறது. தொலைபேசி அழைப்பு முதல் குறுந்தகவல்களை பார்வையிடல், உடற்பயிற்சி, இசையை அனுபவித்தல் வரை, இன்றைய ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள் அன்றாட வாழ்க்கையை எளிதாக்கும் வகையில் உற்பத்தித்திறன் மற்றும் செயல்திறனை அதிகரித்தல், வேலை மற்றும் வாழ்க்கை இடையிலான சமநிலையை உறுதிசெய்தல் போன்றவற்றுக்கு அவசியமான, எதிர்காலத்திற்கு தேவையான பல்வேறு அம்சங்களைக் கொண்டிருக்கின்றன.
தற்போது உலகளாவிய அணிகலன் சந்தையை முன்னோடியாகக் கொண்ட ஒரு முன்னணி தொழில்நுட்ப தீர்வு வழங்குநரான Huawei, வாடிக்கையாளர்களின் சமகால தேவைகளைப் பூர்த்தி செய்யும் தயாரிப்புகளைத் தொடர்ந்தும் வெளியிட்டு வருகிறது. Huawei அணிகலன் வரிசையில் Huawei Watch Fit, Huawei Watch GT2, Huawei Watch GT2 Pro, Huawei Band 4, Huawei Band 4e ஆகியன சமீபத்திய இணைப்புகளாக சேர்ந்துள்ளன.
இப்பட்டியலில் முதன்மையானது 1.64 அங்குல Amoled சதுர வடிவ திரை, ஸ்டைலான வடிவமைப்பு, 10 நாட்கள் வரை நீடிக்கும் மின்கலம், வேகமான சார்ஜிங் தொழில்நுட்பத்துடன் Huawei Watch Fit வருகிறது. இது சுறுசுறுப்பான வாழ்க்கை முறைக்கு வழிவகுக்கும் பலவிதமான உடற்பயிற்சி கண்காணிப்பு அம்சங்களுடன் வருவதோடு, அதிலுள்ள அனிமேஷன் கொண்ட பிரத்தியேக பயிற்சியாளர் அமைப்பானது, அதன் தனித்துவமான உடற்பயிற்சி தொடர்பான அம்சங்களில் ஒன்றாகும். இந்த ஸ்மார்ட் கைக்கடிகாரமானது, 12 அனிமேஷன் உடற்பயிற்சி கற்கைகள் மற்றும் தரப்படுத்தப்பட்ட 44 உடற்பயிற்சி அம்சங்களைக் கொண்டுள்ளது. இது 96 பயிற்சி செயன்முறைகள், 11 தொழில்முறை விளையாட்டு பயன்முறைகள், 85 சுதந்திரமான விளையாட்டு பயன்முறைகள் ஆகியவற்றை கொண்டுள்ளது. Watch Fit ஆனது, மன அழுத்தத்திலிருந்து விடுதலை பெற உதவுகின்ற Huawei TruRelax தொழில்நுட்பம், தூக்கத்தின் தரத்தை அளவிட உதவுகின்ற Huawei TruSleep TM 2.0 வசதி, இதயத் துடிப்பை துல்லியமாக கண்காணிக்கக்கூடிய Huawei TruSen 4.0 இதய துடிப்பு கண்காணிப்பு தொழில்நுட்பம் போன்ற மேம்பட்ட தொழில்நுட்பங்களைக் கொண்டுள்ளது.
Huawei Watch GT2 ஆனது, மற்றொரு புதுமையாக வடிவமைக்கப்பட்ட, மிக மெல்லிய ஸ்மார்ட் கைக்கடிகாரமாகும். இது 50 மீற்றர் வரை நீர் எதிர்ப்புத் தன்மை, இரண்டு வாரங்களுக்கும் அதிக மின்கல ஆயுள், Bluetooth தொலைபேசி அழைப்புகள், இசை கேட்டல், விஞ்ஞான ரீதியான தூக்க கண்காணிப்பு, உடற்பயிற்சி கண்காணிப்பு, தகவல் உதவியாளர், இதயத் துடிப்பு கண்காணிப்பு, GPS கண்காணிப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது. அதன் குறைந்த எடை, நவநாகரீகமானதும் கீறல் எதிர்ப்பு கொண்டதுமான வடிவமைப்பு, விஞ்ஞான ரீதியான உடற்பயிற்சி வழிகாட்டல்கள், துல்லியமான ஆரோக்கிய கண்காணிப்பு வசதிகள் ஆகியன காரணமாக, அது தினசரி பயன்பாட்டிற்கான சிறந்த கைக்கடிகாரமாக திகழ்கிறது. மேலும், அதன் உள்ளே காணப்படும் accelerometer மற்றும் gyroscopic சென்சர்கள் மூலம், நாள் முழுவதும் உங்களது பல்வேறு வகையான உடற்பயிற்சி நடவடிக்கைகள் மற்றும் அது தொடர்பான தரவை அடையாளம் கண்டு, உங்கள் உட்பயிற்சிகளை கண்காணிக்கிறது. அத்துடன் ஆழ்ந்த தூக்கம், ஓரளவான தூக்கம், கண்ணின் உடனுக்குடனான இயக்கம் போன்ற குறிப்புகள் மூலம் இதயத் துடிப்பு, தூக்க நேரம் தொடர்பான விரிவான தரவை வழங்குவதன் மூலம் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகளை முன்வைக்கிறது.
தைத்தேனியம் மற்றும் நீல மாணிக்கம் மூலம் தயாரிக்கப்பட்ட அதியுயர் தொழில்சார் ஸ்மார்ட் கைக்கடிகாரமான Huawei Watch GT2 Pro ஆனது, 100 தனிப்பயனாக்கப்பட்ட உடற்பயிற்சிகளையும், 10 இற்கும் மேற்பட்ட ஓடுவது தொடர்பான கற்கைகளையும், இதயத் துடிப்பு, சராசரி வேகம், உச்சபட்ச சாய்வு போன்ற அளவீடுகளையும் கொண்டுள்ளது. திடீர் வானிலை மாற்றம் ஏற்படும்போது உடனடியாக பயனரை எச்சரிப்பதோடு, பயனர் தான் தற்போதுள்ள இடதிலிருந்து தனது வீட்டிற்கு திரும்புவதற்கான வழியைக் கண்டறியவும் உதவுகிறது. குறிப்பாக பயணங்களில் கடந்து வந்த பாதை தொடர்பில் மிகவும் பயனுள்ளதாக அமைகின்றது. குரல் உதவியுடன் தொழில்முறை பயிற்சியாளராக செயல்படும் இந்த ஸ்மார்ட் கைக்கடிகாரம், ஒருவருக்கு தனிப்பட்ட பயிற்சிக்கு தேவையான அனைத்தையும் வழங்குகிறது. அதன் பிரத்தியேக golf driving mode பயன்முறை, கோல்ப் விளையாட்டு திறன்களை மேம்படுத்த உதவுகிறது. GT2 Pro சுய-விருத்தியுடனான Kirin A1 chip போன்ற குறைந்த சக்தி நுகர்வு கொண்ட கூறுகளை கொண்டுள்ளதனால், வயர்லெஸ் மற்றும் விரைவான சார்ஜிங் தெரிவுகள் மூலம் ஒரே சார்ஜிங்கில் 2 வாரங்கள் வரையான, நீண்ட மின்கல ஆயுளை இது வழங்குகிறது. மேலும், தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளித்தல், பாடல்களை இசைத்தல் முதற்கொண்டு தூக்கம், இதயத் துடிப்பு, உடற்பயிற்சி போன்றவற்றை கண்காணிப்பதற்கான வசதிகள் உள்ளிட்ட ஏராளமான அம்சங்களை Huawei GT Pro கொண்டுள்ளது.
இப்பட்டியலில் அடுத்து Huawei Band 4 காணப்படுகின்றது. இது வண்ணமயமான 2.5D தொடுதிரை, ஸ்டைலான கைக்கடிகார முகப்பு, ஆரோக்கியம் தொடர்பான கண்காணிப்பு, SpO2 கண்காணிப்பு, வெளிச்சார்ந்த மற்றும் உள்ளார்ந்த விளையாட்டு பயன்முறைகள், ஸ்மார்ட் குறுந்தகவல் அறிவிப்புகள் உள்ளிட்ட அம்சங்களால் நிரம்பியுள்ளது. Huawei Band 4 ஆனது, ஒரே தடவையிலான SpO2 மட்ட அளவீட்டு வசதியை வழங்குகின்றது. இதன் மூலம் இரத்தத்தில் ஒட்சிசனின் அளவைக் கண்டறிவதோடு, துல்லியமான இதயத் துடிப்பு விபரங்களையும், தூக்கத்தின் தரமும் கண்காணிக்கப்படுகிறது. இது பயனருக்கு அதிர்வுகள் ஊடாக, நுண்ணறிவு ரீதியான நினைவூட்டல்களை வழங்குவதன் மூலம் ஆரோக்கியம் தொடர்பில் கரிசனை கொண்டதாக அமைகப்பட்டுள்ளது. அத்துடன், இதயத் துடிப்பு, இதய துடிப்பு வலயம், காலடி எட்டுகள், இடப்பெயர்ச்சி, வேகம், கலோரிகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் விரிவான தரவு விபரங்களை வழங்குகிறது. மிக முக்கியமாக, ஸ்மார்ட்போனுட்ன் Band 4 இனை எளிதாக இணைப்பதன் மூலம், பயனர்கள் தமக்கு வருகின்ற எந்தவொரு குறுகிய அறிவிப்புகளையோ, தொலைபேசி அழைப்புகளையோ உடனுக்குடன் அணுக முடியும். Huawei Band 4 இன் உள்ளமைக்கப்பட்ட USB அமைப்பானது, பொதுவான USB சார்ஜர்களுடன் பொருந்துவதால், பயனர்கள் எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் அதனை சார்ஜ் செய்ய முடியும் என்பதோடு, ஒரு சார்ஜில், 6 நாட்களுக்கு அதிகமான பயன்பாட்டு நேரத்தை இந்த ஸ்மார்ட் பேண்ட் மூலம் பெற முடிகிறது.
Huawei Band 4e ஆனது, இளமை ததும்பும் அணிகலனாகும். இது காலணியுடன் அணியும் வடிவமைப்புக் கொண்ட மேம்பட்ட உடற்பயிற்சி கண்காணிப்பு மற்றும் கூடைப்பந்து விளையாட்டின் போதான செயற்றிறனைக் கண்காணிப்பதற்கான தனித்துவமான அம்சம் உள்ளிட்ட புதுமையான அம்சங்களுடன் வருகிறது. 50 மீற்றர் ஆழம் வரை நீருக்கு எதிர்ப்புத் தன்மை கொண்ட இது, 2 வாரங்கள் வரையான நீண்ட மின்கலம் ஆகிய வசதியையும் வழங்குகிறது. ஒவ்வொரு இயக்கத்தையும் கண்காணித்து பகுப்பாய்வு செய்வதன் மூலம், பயனரின் கூடைப்பந்து விளையாட்டுத் திறனை மேம்படுத்த, Huawei Band 4e உதவியளிக்கிறது. இது 6 இயக்க அச்சு சென்சர்களின் உதவியுடன் ஓட்டங்கள் தொடர்பான விரிவான புள்ளிவிபரங்களையும் வழங்குகிறது. அதன் புதுமையான இரு விதமான அணியும் பயன்முறை காரணமாக, பயனர்கள் அதனை மணிக்கட்டில் மாத்திரமன்றி காலிலும் அணிய முடியும்.
Huawei Watch Fit ஆனது, ரூ. 26,499 எனும் விலையிலும், Huawei Watch GT2 ஆனது, ரூ. 43,999 எனும் விலையிலும், Huawei GT2 Pro ஆனது, ரூ. 57,999 எனும் விலையிலும், Huawei Band 4 ஆனது, ரூ. 7,499 எனும் விலையிலும், Huawei Band 4e ஆனது, ரூ. 5,099 எனும் விலையிலும் கிடைப்பதோடு, அனைத்து Huawei அனுபவ மையங்கள், நாடு முழுவதுமுள்ள சிங்கர் காட்சியறைகள், Daraz.lk, Singer.lk ஆகிய இலத்திரனியல் தளங்களிலும் அவற்றை கொள்வனவு செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply