Daraz.lk இல் முதல் மூன்று இடங்களில் இடம்பிடிக்கும் realme ஸ்மார்ட்போன்
இளைஞர்களின் விருப்பத் தெரிவு தரக்குறியீடான realme ஆனது Daraz உடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்து
– உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் ஸ்மார்ட்போன் தரக்குறியீடான realme, ஜூன் 24ஆம் திகதியன்று Daraz உடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் உத்தியோகபூர்வமாக கையெழுத்திட்டது. அதன் ஒன்லைன் வியாபித்தல், இலங்கை மற்றும் பிற நாடுகளில் விற்பனையை மேம்படுத்தும் நோக்கில், ‘Daraz மில்லியன் ஆசைகள்’ எனும் எண்ணக்கருவில் அமைந்த இலங்கையின் மிகப்பெரிய ஒன்லைன் ஷொப்பிங் தளமான Daraz.lk தளத்தில் 3ஆம் இடத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது.
realme Sri Lanka வின் சந்தைப்படுத்தல் தலைவர், Shawn Yan இது தொடர்பில் கருத்து வெளியிடுகையில், “இலங்கையின் மிகப்பெரிய ஒன்லைன் ஷொப்பிங் தளமான Daraz.lk இல் எமது தரக்குறியீட்டின் நுழைவின் மூலம், மொபைல் மற்றும் டெப்லெட் தரக்குறியீடுகளில் முதல் மூன்று இடங்களுக்குள் நாம் நுழைந்துள்ளமையானது, realme தற்போது இலங்கை ஸ்மார்ட்போன் சந்தையில் ஆளமான நங்கூரத்தை இட்டுள்ளது என்பதைக் காட்டுகிறது” என்றார்.
இணைய வர்த்தகத்தின் DNA யில், realme ஆனது, உலகிலேயே வேகமாக விற்பனையாகும் ஸ்மார்ட்போன் தரக்குறியீடாக வளர்ந்தது போன்று, ஒன்லைன் சந்தையையும் கைப்பற்ற துடிக்கிறது. Daraz இனால் சிறப்பாக நிறுவப்பட்டுள்ள இணைய வர்த்தகத்தள அமைப்பு மற்றும் அது இலங்கைக்குள் சென்றடையும் விதம் என்பன, இப்புதிய கூட்டாண்மைக்கு ஒரு சிறந்த ஊக்கமாக அமையும்.
“realme என்பது ஒரு புத்தம் புதிய, இளைஞர்களை மையமாகக் கொண்ட ஸ்மார்ட்போன் தரக்குறியீடாகும். இது அதன் வருகையின் மூன்று ஆண்டுகளில் உலகளாவிய ரீதியில் 61 சந்தைகளில் நுழைந்துள்ளது. சந்தையில் 200 இற்கும் மேற்பட்ட மொபைல் போன் தரக்குறியீடுகள் ஏற்கனவே காணப்பட்ட நிலையில் 2018 ஆம் ஆண்டில் realme நிறுவப்பட்டது. இவ்வாறான நிலைப்பாடு காணப்பட்ட போதிலும், தற்போது உலகில் வேகமாக வளர்ந்து வரும் ஸ்மார்ட்போன் தரக்குறியீடாக அது மாறியுள்ளது. நாம் 2018 இல் “Dare to Leap” எனும் எண்ணக் கருவுடன், எமது தயாரிப்புகளில் தொழில்நுட்ப முன்னேற்றங்களை நாம் மேற்கொள்கிறோம் என்பதைக் காட்டும் வகையில் எம்மை வெளிப்படுத்தினோம். மூன்று ஆண்டுகளில், realme உலகின் 7ஆவது மிகப் பெரும் ஸ்மார்ட்போன் நிறுவனமாக மாறியது. Counterpoint Research நிறுவனத்தால் உலகளாவிய 5G ஸ்மார்ட்போன் விற்பனையில் வேகமாக வளர்ந்து வரும் ஜாம்பவானாக realme பெயரிடப்பட்டது.”
realme ஆனது, தற்போது உலகின் 7ஆவது மிகப் பெரும் ஸ்மார்ட்போன் விற்பனையாளராக உள்ளதுடன், மொத்தமாக 85 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களையும் அது கொண்டுள்ளது. இளம் நுகர்வோரின் வாழ்க்கை முறை, அவர்களது தேவைகளைப் பூர்த்தி செய்தல், கட்டுப்படியாகும் விலை, உயர் செயல்திறன், ஸ்டைலான வடிவமைப்பு மற்றும் AIoT தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் ஸ்மார்ட்போன் துறையில் எல்லையற்ற வகையிலான மிகப்பெரிய வளர்ச்சியை அது அடைந்துள்ளது. இணைய வர்த்தக DNA தொடர்பில் அதன் அர்ப்பணிப்புடன், realme பல்வேறு சந்தைகளில் முன்னணி இணைய வர்த்தக நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து உலகளாவிய சந்தையில் ஒரு கோட்டையை நிறுவியுள்ளது.
இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம், மியன்மார் ஆகிய ஐந்து தெற்காசிய சந்தைகளில் செயல்பாட்டைக் கொண்டுள்ள Daraz (Alibaba Group), 500 மில்லியன் மக்கள் அதனை அணுகுவதற்கு வழியமைத்துள்ளது. இதன் மூலம் பிராந்தியத்தில் தனது ஒன்லைன் தடத்தை விரிவாக்க realme இற்கு ஒரு அருமையான தளம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. Daraz ஆனது, மிக சிறப்பாக நிறுவப்பட்ட இணைய வர்த்தக உட்கட்டமைப்பைக் கொண்டிருப்பதுடன் மட்டுமல்லாமல், நேரடி வர்த்தக தீர்வுகளையும் கொண்டுள்ளதனால், realme அதன் வாடிக்கையாளர்களுக்கு அதன் தயாரிப்புகளை விரைவாகவும் நம்பகத்தன்மையுடனும் பெற அது வழியமைக்கிறது.
இலங்கையில் realme மற்றும் Daraz இடையிலான ஒத்துழைப்பானது, உள்ளூர் நுகர்வோருக்கு பொருளாதார ரீதியாகவும் எளிதான ஷொப்பிங் அனுபவத்தையும் கொண்டு வந்துள்ளது. இதன் விளைவாக விற்பனை செயல்திறனில் வலுவான வேகமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு Daraz 11.11 சுப்பர் விற்பனையில், Daraz South Asia (தெற்காசியாவில்) மொபைல்கள் மற்றும் டெப்லெட்டுகள், ஓடியோ, ஸ்மார்ட் அணிகலன்கள் பிரிவுகளில் realme முதலிடம் வகிக்கிறது.
Daraz உடனான ஆழமான ஒத்துழைப்பு பற்றி கருத்து வெளியிட்ட realme e-commerce head, SEA & SA, இணைய வர்த்தக தலைவரான Tony Lin, “realme உலகளவில் மற்றும் உள்நாட்டில் வேகமாக வளர்ந்து வரும் ஸ்மார்ட்போன் தரக்குறியீடாகும். அத்துடன் நாம் பிரதிநிதித்துவப்படுத்தும் சந்தையில் புதிய உத்வேகத்தை உருவாக்குவதில் நாம் முன்னணியில் இருக்கிறோம். எமது முக்கிய இலக்கு சந்தையாக, Gen-Z (புதிய தலைமுறை) அமைந்துள்ளனர். வசதி மற்றும் சட்டைப் பைக்கு பாரமில்லாத விலையின் அடிப்படையில் ஒன்லைனில் பொருட்களை வாங்குபவர்களாக அவர்கள் இருக்கின்றனர். இதேவேளை, Daraz உடன் சேர்ந்து, realme தனது ஸ்மார்ட்போன் மற்றும் AIoT தயாரிப்புகளின் வரிசைகளை பங்களாதேஷுக்கு கொண்டு வந்து, இளைஞர்களின் தொழில்நுட்ப வாழ்க்கையை மேம்படுத்தும்.” என்றார்.
Daraz குழுமத்தின் தலைமை வர்த்தக அதிகாரி Jan Philipp Poeter இது தொடர்பில் தெரிவிக்கையில், “குறிப்பாக இளம் பயனர்களைக் குறிவைத்து, தெற்காசியாவில் இணைய வர்த்தகம் கொண்டு வந்துள்ள முழு அளவிலான வாய்ப்புகளை realme பயன்படுத்துவதைப் பார்ப்பது புத்துணர்ச்சியளிக்கிறது. இந்த கூட்டிணைவானது, விற்பனையை மேற்கொள்வது மட்டுமல்லாது, ஒன்லைனில் realme தரக்குறியீட்டுக்கான இடத்தை உருவாக்குவதும், அதன் சந்தை நுழைவுக்கான மேம்பாட்டிற்காக Daraz இனை அணுகுவதுமாகும். பிராந்தியத்தில் முன்னணி மொபைல்கள் மற்றும் இலத்திரனியல் தரக்குறியீடாக மாறுவதற்கான அதன் பணியின் வெற்றியைப் பற்றிய ஒரு சிறந்த ஆய்வு, தற்போது செயல்படுவதைப் பார்ப்பதையிட்டு மகிழ்ச்சியளிக்கிறது. தொடர்ச்சியான ஒத்துழைப்புடன், நாம் எப்போதும் புதிய உச்சங்களை எட்டுவதில் நம்பிக்கையுடன் இருக்கிறோம்!” என்றார்.
Daraz உடனான இந்த கூட்டாண்மையானது, realme யின் இணைய வர்த்தக DNA மீதான உறுதிப்பாட்டையும், நித்தமும் ஒன்லைனில் உள்ள இளம் நுகர்வோருக்கு, அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் தயாரிப்புகளை மேலும் அணுகக்கூடிய வகையில், வழங்குவதற்கான அதன் உறுதியையும் அதிகரிக்கிறது. ‘5G இனை பிரபலப்படுத்துபவர்’ என்ற வகையில், 2024 இற்குள் 100 மில்லியன் 5G தொலைபேசிகளை வழங்குவதற்கான குறிக்கோளுடன் realme ஆனது, 5G தயாரிப்புகளின் மாறுபட்ட தயாரிப்புகளை உருவாக்கி வருகிறது. எதற்கும் இணையற்ற வகையிலான கட்டுப்படியாகும் வகையிலான 5G தொலைபேசிகள், AIoT தயாரிப்புகளை இளம் நுகர்வோருக்கு Daraz மூலம் கொண்டு வரும் realme அதன் மேம்பட்ட ‘1+5+T’ மூலோபாயத்துடன் AIoT 2.0 மேம்பாட்டு கட்டத்திற்குள் நுழைந்துள்ளது: 1 ஸ்மார்ட்போன், உண்மையான வயர்லெஸ் ஸ்டீரியோ (TWS), ஸ்மார்ட் அணிகலன்கள், தொலைக்காட்சி, மடிகணனிகள், டெப்லெட் உள்ளிட்ட realme யின் AIoT தயாரிப்புகளுக்கான 5 முக்கிய பிரிவுகள் இதில் அடங்குகின்றன. இங்கு T என்பது realme யின் திறந்த கூட்டாளர் தளமான TechLife என்பதைக் குறிக்கிறது. இது realme யின் சொந்த விற்பனை பிரிவுகளைப் பகிர்வதன் மூலம் புதுமையான மற்றும் ஆற்றல்மிக்க AIoT தொடக்கங்களை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
Daraz யின் மிகப்பெரிய இலத்திரனியல் விற்பனையில் ஒன்றான ‘Daraz Electronics Week 2021’ இனைத் தொடர்ந்து இந்த கூட்டிணைவு அறிவிப்பு வந்துள்ளது. தற்போது இடம்பெற்று வரும் ‘Daraz Electronics Week 2021’ வாரத்தில் ஒன்லைன் விற்பனையில் realme கணிசமான பகுதியைப் பெற்றுள்ளதுடன், கடந்த 6 ஆண்டுகளில் எந்த ஸ்மார்ட்போனும் அடையாத மிக உயர்ந்த விற்பனையையும் அது அடைந்துள்ளது.
Realme பற்றி:
Realme என்பது ஒரு தொழில்நுட்ப தரக்குறியீடாகும். இது முன்னணி தரம் மற்றும் காலத்திற்கு ஏற்ற நவீனத்துவமான ஸ்மார்ட்போன்களாகும் என்பதுடன் அது AIoT தயாரிப்புகளை உலக சந்தைக்கு வழங்குகிறது. Realme பயனர்கள், இளமை மற்றும் உலக அளவிலான எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள். Realme தயாரிப்புகள் யாவும், சமீபத்திய தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்பைப் பயன்படுத்தி இளைஞர்களை ‘துள்ளுவதற்கு துணிய’ வழி வகுக்கின்றன. Realme உலகின் 7ஆவது சிறந்த ஸ்மார்ட்போன் தரக்குறியீடாக விளங்குவதோடு, 2020 இன் 3ஆவது காலாண்டில் உலகளாவிய ஸ்மார்ட்போன் ஏற்றுமதிகளின் Counterpoint புள்ளி விபரங்களின்படி பிரதான ஸ்மார்ட்போன் தரக்குறியீடுகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டில், Realme இனது உலகளாவிய ஸ்மார்ட்போன் ஏற்றுமதி 25 மில்லியனை எட்டி, அது வருடத்திற்கு வருட (YoY) வளர்ச்சி 808% விகிதத்தை அடைந்ததன் மூலம், 2019 இலிருந்து 2020 இரண்டாம் காலாண்டு வரை தொடர்ச்சியாக நான்கு காலாண்டுகளில் உலகில் மிக வேகமாக வளர்ந்து வரும் ஸ்மார்ட்போன் தரக்குறியீடாக அடையாளம் காணப்பட்டுள்ளது. உலகளாவிய ரீதியில் சீனா, தென்கிழக்கு ஆசியா, தெற்காசியா, ஐரோப்பா, ரஷ்யா, அவுஸ்திரேலியா, மத்திய கிழக்கு, ஆபிரிக்கா உள்ளிட்ட 61 சந்தைகளில் Realme தனது கால்தடத்தை பதித்துள்ளதுடன், 70 மில்லியனுக்கும் அதிகமான உலகளாவிய பயனர்களையும் அது கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Daraz.lk பற்றி:
Daraz ஆனது தெற்காசியாவில் மாத்திரமல்லாது இலங்கையிலும் முன்னணி ஒன்லைன் சந்தையாக விளங்குகின்றது. 2012 இல் ஆரம்பிக்கப்பட்ட இது, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, மியன்மார், நேபாளம் ஆகிய நாடுகளில் உயிர்ப்பாக இயங்கி வருகின்றது. பரந்துபட்ட வகையில் வடிவமைக்கப்பட்ட சந்தைப்படுத்தல், தரவு, சேவைத் தீர்வுகளால் ஆதரிக்கப்படும் Daraz, 30,000 விற்பனையாளர்களையும் realme உள்ளிட்ட 500 தரக்குறியீடுகளையும் கொண்டுள்ளதுடன், பிராந்தியத்தில் 5 மில்லியன் நுகர்வோருக்கு சேவையளித்தும் வருகிறது.
Leave a Reply