Huawei மற்றும் ASEAN அறக்கட்டளையினால் நடாத்தப்பட்ட ஆசிய பசிபிக் டிஜிட்டல் திறமையாளர் உச்சி மாநாட்டில், ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் எதிர்காலத்திற்கு தயாராகும் ICT திறமையாளர் குழுவை நிர்மாணிப்பது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அரசாங்கம், கல்வித்துறை, தொழில்துறையின் பிரதிநிதிகள் ஒன்றிணைக்கப்பட்டனர். டிஜிட்டலின் ஆற்றலை வெளிக்கொணர திறமையாளர்களை வளர்ப்பதில் கவனம் செலுத்தும் இந்த சந்திப்பு, Huawei நடாத்தும் வருடாந்த முதன்மையான நிகழ்வான Huawei Connect நிகழ்வின் போது நடைபெற்றது.
ASEAN இன் சமூக-கலாச்சார சமூகத்திற்கான துணைப் பொதுச்செயலாளர் Ekkaphab Phanthavong தனது தொடக்க உரையில் கருத்து வெளியிடுகையில், “இப்பிராந்தியத்தில் புத்தாக்கமான ICT திறமையாளர்களை எவ்வாறு வளர்ப்பது, அவர்களின் தற்போதைய நிலையை அடையாளம் காண்பது பற்றிய முயற்சிகளை ஒருங்கிணைப்பதற்கும், கலந்துரையாடலை முன்னெடுப்பதற்கும், டிஜிட்டல் நெருக்கடிகள் மற்றும் ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்து, முன்னேறும் படியைத் தீர்மானிக்கவும் இந்த உச்சிமாநாடு அவசியமாகும்” என்று விளக்கினார்.
ASEAN அறக்கட்டளையின் நிறைவேற்று பணிப்பாளர் Dr. Yang Mee Eng இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், “இந்த உச்சிமாநாட்டின் மூலம், பிராந்தியத்தின் டிஜிட்டல் மாற்றத்தின் பொருட்டு, ஒருமித்த கருத்தை மேம்படுத்தவும், சிக்கல்களைச் சமாளிக்கவும், டிஜிட்டல் இடைவெளிகளைத் தீர்ப்பதற்கும், புத்தாக்கம் கொண்ட திறமையாளர்களை வளர்த்தெடுப்பதற்கும், டிஜிட்டல் முறைகளை வெளிக்கொணரவும் போதுமான நடவடிக்கைகளை எடுக்க பிராந்தியம் முழுவதிலும் உள்ள முக்கிய பங்குதாரர்களை நாம் அழைத்து வருகிறோம்.”
Huawei நிறுவனத்தின் பொது விவகாரங்கள் மற்றும் தகவல்தொடர்பு தலைவர் Jeff Wang, திறமையாளர்களை வளர்ப்பது தொடர்பான நிறுவனத்தின் சொந்த இலக்குகளை விளக்கினார், “டிஜிட்டல் மாற்றத்தை முன்னோக்கி கொண்டு செல்வதற்காக மக்களை இணைப்பது மற்றும் அடுத்த தலைமுறை திறமையாளர்களை உருவாக்குவது முன்னெப்போதையும் விட முக்கியமானதாகும். இணையத்துடன் இணைக்கப்படாதவர்களுக்கு இணைய அணுகலை வழங்குவதை நோக்ககாக் கொண்டு, 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆசியா பசிபிக் கூட்டாளர்களுடன் நெருக்கமாக இணைந்து பணியாற்றி வருகிறோம். இதேவேளை, 2026 ஆம் ஆண்டளவில் பிராந்தியத்தில் உள்ள 500,000 ICT திறமையாளர்களுக்கு பயிற்சி அளிக்கும் எமது இலக்கை அடைவதற்கான பாதையில் நாம் தற்போது இருக்கிறோம்.” என்றார்.
Leave a Reply