முன்னணி தொழில்நுட்ப தீர்வுகள் வழங்குநரான Huawei, இந்த டிஜிட்டல் சகாப்தத்தின் அதிகரித்து வரும் தேவைகளை நிவர்த்தி செய்யும் பரந்த அளவிலான தொழில்நுட்ப தயாரிப்புகளின் வரிசையைக் கொண்டுள்ளது. ஸ்மார்ட்போன்கள், டெப்லெட்கள், மடிகணினிகள் அணியக்கூடியவை மற்றும் ஓடியோ சாதனங்கள் போன்ற புதுமையான தொழில்நுட்ப தீர்வுகள் முதல், டிஜிட்டல் பரப்பை புரட்சிகரப்படுத்தும் விரிவான தொழில்நுட்ப தயாரிப்பு வரிசையை Huawei வழங்குகிறது. அண்மையில் வெளியிடப்பட்ட ஸ்மார்ட் சாதனங்களின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்று Huawei Nova 7 SE.
Nova 7 SE இன் மிகவும் கவர்ச்சிகரமான அம்சம் 5G தொழில்நுட்பமாகும், இது மிகவும் சக்திவாய்ந்த Kirin 820 5G SoC chipset உதவியுடன் அதிவேக மற்றும் நவீன ஸ்மார்ட்போன் அனுபவத்தை வழங்குகிறது. Nova 7 SE இன் மெலிதான மற்றும் இளமையான வடிவமைப்பு மற்றும் கவர்ச்சிகரமான வண்ணங்கள் – ஸ்பேஸ் சில்வர், க்ரஷ் கிரீன் மற்றும் மிட்சம்மர் பர்பில், அதன் 3D கிளாஸ் மேற்பரப்பு ஈர்ப்பனவையாக உள்ளன. இது 90% திரை முதல் உடல் விகிதத்தைக் கொண்ட 6.5 அங்குல Full HD டிஸ்ப்ளேவுடன் மற்றும் 2400×1080 திரை தெளிவுத்திறனுடன் வருகிறது.
Nova 7 SE இன் குவாட் கெமரா அமைப்பானது, அதன் அதிக பிரபலத்திற்கு காரணமாக அமைந்துள்ளது. Nova 7 SE ஆனது, 64 MP அல்ட்ரா உயர் தெளிவுத்திறன் கொண்ட பிரதான கெமரா, 8 MP அல்ட்ரா வைட் ஆங்கிள் கெமரா, 2 MP Bokeh கெமரா மற்றும் 2MP மெக்ரோ கெமரா ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது அடுத்த நிலை புகைப்பட அனுபவத்தைக் கொண்டுவரும் அதே நேரத்தில், 4K High definition வீடியோ, Dual View வீடியோ போன்ற படைப்பாற்றல் தெரிவு அம்சங்கள் கொண்ட வீடியோ பதிவிடல், Super Slow-Motion, Time Lapse போன்ற கையடக்கத் தொலைபேசி வீடியோ பதிவிடல் அம்சத்திற்கு மேலும் மதிப்பை கொண்டு வருகின்றன. இதன் செல்பி கெமரா 16MP வில்லையுடன், Super night mode செல்பி தொழில்நுட்பத்தையும் கொண்டுள்ளது. இதன் BM3D denoising algorithm குறைவான ஒளி நிலையிலும் சிறப்பான படங்களை எடுக்க வழி செய்கின்றது.
Nova 7 SE இன் 8GB RAM ஆனது, அதன் மிக விரைவான செயல்திறன் மட்டங்களில் பெரிய பங்கு வகிப்பதுடன், 128GB சேமிப்பகம் மூலம் அனைத்து பயனர்களும் அவர்களின் அனைத்து வீடியோக்கள், புகைப்படங்கள், விளையாட்டுகள், செயலிகள், கோப்புகளை சேமிப்பதற்கான வசதிகளையும் வழங்குவதுடன், தடையற்ற செயற்பாட்டையும் உறுதி செய்கின்றது. Nova 7 SE ஆனது, 4,000 mAh திறன் கொண்ட பெரும் மின்கலத்தை கொண்டுள்ளதன் மூலம், இது ஒரு முழு நாள் பயன்பாட்டை எவ்வித தடையுமின்றி வழங்குகிறது. அத்துடன், Huawei Super Charge தொழில்நுட்பத்துடன் வருவதன் காரணமாக, 30 நிமிடங்களுக்குள் மின்கலத்தை 70% வரை சார்ஜ் செய்ய வழிவகுக்கிறது.
Huawei நிறுவனத்திடமிருந்து நவீன அணியக்கூடிய சாதனமான, Band 4e (Active) அதன் பிரிவில் இரட்டை அணியும் பயன்முறையுடன் தனித்துவமானதென்பதுடன், இது பயனருக்கு ஸ்மார்ட் பட்டியினை காலின் மணிக்கட்டில் அணிய உதவுகிறது. 6 கிராம் மட்டுமே (பட்டி இல்லாமல்) நிறை கொண்ட இந்த மிக இலகுவான ஸ்மார்ட் பேண்ட் 0.5 அங்குல PMOLED திரையுடன் வருகிறது. இது slide and touch சைகைகளையும் ஆதரிக்கிறது.
Huawei Band 4e (Active) இன் சைக்கிள் ஓட்டுதல் கண்காணிப்பு, கூடைப்பந்து செயல்திறன் கண்காணிப்பு, 5ATM நீரிலிருந்தான பாதுகாப்பு, 2 வார மின்கல ஆயுள் ஆகியன முக்கிய சிறப்பம்சங்கள் என்பதுடன், இவை ஸ்மார்ட் பேண்ட் பிரிவில் ஏனையவற்றை விட சிறப்பானதாக இதனை ஆக்குகின்றது.
Huawei Band 6 சிறம்பம்சம் நிரம்பியதாகும். இது இளைஞர்களிடையே பிரபலமாக உள்ளது. Huawei Band 6, 1.47 அங்குல AMOLED Full view displa உடன் வருவதுடன், குறைந்த விளிம்புடன் கூடிய 64% திரை முதல் உடல் விகிதம் மற்றும் 4-வழி தொடு கட்டுப்பாட்டு அமைப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. வெறும் 18 கிராம் எடையுள்ள Huawei Band 6 நாள் முழுவதும் அணிவதற்கு அதிகபட்ச வசதியை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
Huawei Nova 7 SE ரூபா 68,999/- என்ற விலையிலும் Huawei Band 4e (Active) ரூபா 5,499/- என்ற விலையிலும் , Huawei Band 6 ரூபா 15,999/-கிடைக்கின்றது. Huawei experience centers, Singer காட்சியறைகள், Daraz.lk, Singer.lk ஊடாக பெற்றுக்கொள்ள முடியும்.
Leave a Reply