தாய்லாந்து தேசிய இணைய பாதுகாப்பு நிறுவனத்தினால் (NCSA) வழங்கப்பட்ட ‘Prime Minister Awards – Thailand Cybersecurity Excellence Award 2022’ (தாய்லாந்து இணைய பாதுகாப்பு சிறப்பு விருது 2022 – பிரதமர் விருதுகள்) எனும் விருதை, Huawei Technologies (தாய்லாந்து) நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி Abel Deng, அந்நிறுவனத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பெற்றுக் கொண்டார். பெங்கொக்கின் Miracle Grand Convention Hotel இல் நடைபெற்ற இவ்விழா, டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் சமூக அமைச்சர் (MDES) Chaiwut Thanakamanusorn தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில், NCSA பொதுச் செயலாளர் நாயகம் Prachya Chalermwat, அரசாங்க மற்றும் தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.
நாடு முழுவதும் இணையப் பாதுகாப்பு மற்றும் தரவுப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியமை, தகவல் பாதுகாப்பில் சிறந்து விளங்கியமை, புத்தாக்கம் மற்றும் தலைமைத்துவத்திற்கான Huawei தாய்லாந்து நிறுவனத்தின் உறுதிப்பாடு ஆகியவற்றை இந்த பெறுமதிமிக்க விருது பிரதிபலிக்கிறது. கடந்த 12 மாதங்களில், Huawei தாய்லாந்து நிறுவனம், ‘Thailand National Cyber Week’ (தாய்லாந்து தேசிய இணைய வாரம்) மற்றும் ‘Cyber Defense Initiative Conference’ (இணைய பாதுகாப்பு முன்முயற்சி மாநாடு) போன்ற இணையப் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு தொடர் முயற்சிகளில் இணைந்திருந்தது. நிறுவனம் NCSA உடன் இணைந்து ‘Thailand Cyber Top Talents 2021’ (தாய்லாந்து இணைய உயர் திறமையாளர்கள் 2021) எனும் தாய்லாந்தில் இவ்வாறான இதுவரை இடம்பெறாத முதலாவது இணையப் பாதுகாப்பு போட்டியொன்றை ஒழுங்கு செய்திருந்தது. இதில் 800 சிறந்த தகவல் தொழில்நுட்ப மாணவர்கள் மற்றும் தனிநபர்கள் ஒன்றிணைந்திருந்தனர். தாய்லாந்தின் இணைய பாதுகாப்பு மனித வள திறன்களை வலுப்படுத்தும் நோக்கில், Huawei நிறுவனம், ‘Cyber SEA Game 2021’ போட்டிக்கு தாய்லாந்து பிரதிநிதிகள் குழுவை அனுப்பியிருந்தது. இப்போட்டியில் ஆசியான் (ASEAN) நாடுகளில் இருந்து குழுக்கள் ஒன்று திரட்டப்பட்டிருந்தனர். இப்போட்டியில் தாய்லாந்து அணி முதல் பரிசைப் பெற்றதோடு, ASEAN இல் சிறந்த இணையப் பாதுகாப்பு குழுவாக அவ்வணி தெரிவு செய்யப்பட்டது.
தாய்லாந்தின் இணையப் பாதுகாப்பு விருதுகள், அந்நாட்டின் இணைய பாதுகாப்பை மேம்படுத்துவதில் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தும், தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களை கௌரவிப்பதற்காக உருவாக்கப்பட்ட ஒன்றாகும். அவர்களின் அர்ப்பணிப்பு, இத்துறையில் அவர்களின் தலைமைத்துவம், சிறந்த வணிக நடைமுறைகள் மற்றும் உத்திகள் ஆகியவற்றை அங்கீகரிப்பதற்காக அவர்களுக்கு இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன. புதிய தொழில்நுட்பங்களின் சவால்களை எதிர்கொள்வதற்கான தனது தொடர்ச்சியான முயற்சிகளுக்காகவும், தனது புத்தாக்கமான இணையப் பாதுகாப்பு தீர்வுகளை, கல்வி மற்றும் அரச நிறுவனங்கள் மற்றும் தனியார் கூட்டாளர்களுடன் பகிர்ந்து கொள்வதற்காகவும் Huawei தாய்லாந்து நிறுவனம் அங்கீகாரம் பெற்றுள்ளது.
END
Leave a Reply