‘Unleash Digital’ பெங்கொக்கில் உலகளாவிய சுற்றுப்பயணத்தை ஆரம்பிக்கும் HUAWEI CONNECT 2022

உலகளாவிய ICT தொழில்துறையில், Huawei இன் 7ஆவது வருடாந்த முதன்மை நிகழ்வான HUAWEI CONNECT 2022 இன்று பெங்கொக்கில் ஆரம்பமானது. இந்த ஆண்டு நிகழ்வின் கருப்பொருள் “Unleash Digital” (டிஜிட்டல் கவிழ்ப்பு) ஆகும். உலகெங்கிலும் உள்ள 10,000 ICT துறை தலைவர்கள், வல்லுநர்கள், கூட்டாளர்களை ஒன்றிணைத்து, டிஜிட்டல் உற்பத்தித்திறனை எவ்வாறு திறம்பட கட்டவிழ்த்து விடுவது, டிஜிட்டல் பொருளாதாரத்தை எவ்வாறு மேம்படுத்துவது, வலுவான டிஜிட்டல் சூழல் தொகுதிகளை எவ்வாறு உருவாக்குவது என்பது தொடர்பில் இங்கு ஆராயப்படுகிறது.

இந்நிகழ்வில், Huawei பரந்த அளவிலான தொழில்துறைகளில் டிஜிட்டல் மேம்பாட்டை முன்னெடுத்துச் செல்லும் நடவடிக்கைகளைப் பகிர்ந்து கொண்டதோடு, உலகளாவிய சந்தைக்கு 15 இற்கும் அதிகமான புத்தாக்கமான கிளவுட் சேவைகளை வெளியிட்டு வைத்தது.

அனைத்து தொழில்துறைகளும் டிஜிட்டலுக்கு செல்ல உதவும் 3 முயற்சிகள்

நிகழ்வை ஆரம்பித்து வைக்கும் வகையில், Huawei நிறுவனத்தின் சுழற்சியுறும் தலைவரான Ken Hu, டிஜிட்டல் மாற்றத்தில் உள்ள பொதுவான தடைகளை தகர்க்க, ICT சூழல் தொகுதி மூலமான 3 வழிகளைக் கோடிட்டுக் காட்டும் ஒரு முக்கிய உரையை நிகழ்த்தினார். அவையாவன:

  • அதி உறுதியான இணைப்பு மற்றும் வலுவான, பல்வகை கணனி வளங்கள் உள்ளிட்ட டிஜிட்டல் உட்கட்டமைப்பை அதிகரித்தல்.
  • எளிய கிளவுட் ஒத்திசைவிற்கு அப்பால் சென்று, முன்னோக்கிப் பாய்ந்து செல்லும் மேம்பாட்டை ஊக்குவிக்கின்ற, மேம்பட்ட தொழில்நுட்ப சேவைகளில் கவனம் செலுத்தி, கிளவுட்டை உண்மையிலேயே பயன்படுத்துவதற்கு நிறுவனங்களுக்கு உதவுதல்.
  • கூட்டாளர் மேம்பாடு, டிஜிட்டல் திறமையாளர்கள் குழுவை வலுப்படுத்துதல் மற்றும் சிறிய நடுத்தர நிறுவனங்களுக்கு (SME) அதிக ஆதரவை வழங்குதல் உள்ளிட்ட உள்ளூர் டிஜிட்டல் சூழல் தொகுதிகளை உருவாக்குதல்.                

இந்தோனேசியாவில் புதிய Huawei Cloud Region மற்றும் 15 இற்கும் அதிக புதிய சேவைகள்

இந்தோனேசியா மற்றும் அயர்லாந்தில் புதிய Huawei Cloud Regions ஆரம்பிக்கப்படவுள்ளதாக, இந்நிகழ்வில் Huawei Cloud இன் பிரதம நிறைவேற்று அதிகாரியான Zhang Ping’an அறிவித்தார். 2022 ஆம் ஆண்டின் இறுதியில், Huawei Cloud ஆனது 170 இற்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களுக்கான சேவைகளை மேம்படுத்தும் என்பதோடு, உலகம் முழுவதும் உள்ள 29 பிராந்தியங்களில் காணப்படுகின்ற 75 வலயங்களை இயக்கும்.

பகிரப்பட்ட வெற்றிக்காக உள்ளூர் தொழில்நுட்ப சூழல் தொகுதிகளை உருவாக்குதல்

இந்நிகழ்வில், Huawei திறந்த ஒத்துழைப்பிற்கான அதன் உறுதிப்பாட்டை வலுப்படுத்தி, வெற்றியைப் பகிர்ந்து கொண்டது. புத்தாக்க கண்டுபிடிப்பு கூட்டாளர்களை உருவாக்குதல், திறமையாளர்களை வலுப்படுத்துதல், தொழில் தொடக்கவியலாளர்களை ஆதரிக்கும் உள்ளூர் டிஜிட்டல் சூழல் தொகுதிகளை வளர்த்தெடுக்கும் பொருட்டு, அரசாங்கங்களும் நிறுவனங்களும் மிகவும் நெருக்கமாக இணைந்து பணியாற்ற வேண்டுமென நிறுவனம் அழைப்பு விடுத்தது.

இந்நிகழ்வில் ஒன்லைன் மூலம் பங்கேற்ற, Siyabasa Technologies பணிப்பாளர் தினெத் சத்துரங்க கருத்து வெளியிடுகையில், “உலகளாவிய ரீதியில் பொருளாதார வளர்ச்சியின் பிரதான இயந்திரமாக டிஜிட்டல் மாற்றம் மாறியுள்ள இவ்வேளையில், இலங்கையின் ICT துறைக்கு HUAWEI CONNECT 2022 ஆனது மிகவும் முக்கியமானது. இன்றைய உலகில் டிஜிட்டல் உட்கட்டமைப்பு என்பது, இளைஞர்களுக்கும் புதிய தலைமுறையினருக்கும் அதிக வாய்ப்புகளை உருவாக்குகின்ற, வேகமான வளர்ச்சிக்காக பொருளாதாரத்தை படிப்படியாக முன்னோக்கி கொண்டு செல்லும் அடித்தளமாக அமையும். HUAWEI CONNECT 2022 வழங்கும் அனைத்து அமர்வுகளும், எதிர்காலம் மற்றும் ICT துறையின் அடிப்படையில், இலங்கை போன்ற நாடுகளுக்கு நிலையான வளர்ச்சியைக் கொண்டு வரக்கூடிய புதிய தொழில்நுட்பங்களைக் கற்கவும் ஆராய்வதற்கும் உதவும் என நான் நம்புகிறேன்.” என்றார்.

2022 ஆம் ஆண்டு HUAWEI CONNECT இன் உலகளாவிய சுற்றுப்பயணத்தின் முதலாவது ஆரம்பப் புள்ளி, பெங்கொக்கில் இடம்பெறும் 3 நாள் மாநாடு ஆகும். 2 முக்கிய அமர்வுகள், 6 உச்சிமாநாடுகள் உள்ளிட்ட பல்வேறு சிறுசிறு அமர்வுகள் மற்றும் செயற்பாட்டு விளக்க காட்சிகளை இது உள்ளடக்கியுள்ளது. இவ்வருட நிகழ்வுகளில் அரசாங்கங்களும் நிறுவனங்களும் எதிர்கொள்ளும் சவால்களை அடிப்படையாகக் கொண்டுள்ளன. அவர்களின் டிஜிட்டல் மாற்றப் பயணத்தின் நிலைகள், டிஜிட்டல் உட்கட்டமைப்பில் Huawei இன் முன்னேற்றங்கள் குறித்து கவனம் செலுத்துவதோடு, Huawei நிறுவனத்தின் சமீபத்திய கிளவுட் சேவைகள், தொழில்நுட்ப சூழல் கூட்டாளர் தீர்வுகள் போன்றவற்றையும் உள்ளடக்கியுள்ளது.

-End-

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*