IPL 2021 இன் பிரதான அனுசரணையாளராக மீண்டும் VIVO

இந்தியன் ப்ரிமியர் லீக் (ஐ.பி.எல்) 2021 இன் பிரதான அனுசரணையாளராக, உலகளாவிய புத்தாக்க ஸ்மார்ட்போன் வர்த்தகநாமமான vivo  மீண்டும் திரும்பியுள்ளது. கடந்த வருட இடைவெளியின் பின்னர் முன்னைய உடன்படிக்கையின் அதே விதிமுறைகளுக்கு உட்பட்டு இந்த இடத்தை vivo தக்கவைத்துக்கொண்டுள்ளது. vivo தனது வாடிக்கையாளர்களுக்கு ஊடாடும் அனுபவத்தை வழங்குவதற்கு கொண்டுள்ள உறுதிப்பாட்டின் சான்று இதுவாகும்.

இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த vivo Sri Lankaவின் பிரதான நிறைவேற்று அதிகாரி, கெவின் ஜியாங், “ஐ.பி.எல் இந்தியாவில் மட்டுமல்ல, இலங்கையிலும் மிகவும் செல்வாக்குமிக்க விளையாட்டாகும். மேலும், இந்த சுற்றுத்தொடருடன் உடனான எங்கள் பங்காண்மையை மீட்டெடுப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இளைஞர்களை மையமாகக் கொண்ட வர்த்தகநாமமாக, vivo நுகர்வோர் மீது பிரதான கவனம் செலுத்துகிறது. மேலும், ஐ.பி.எல் உடனான எங்கள் தொடர்பு அவர்களுடன் சிறப்பாக இணைவதற்கும், எனவே எங்கள் வர்த்தகநாம இருப்பை விரிவுபடுத்துவதற்கும் உதவும். கிரிக்கெட் என்பது இலங்கையின் இளைஞர்களை பிணைக்கும் ஒரு விளையாட்டென்பதுடன், பல ஆண்டுகளாக, இந்த சுற்றுத்தொடர் உடனான எங்கள் தொடர்பு நுகர்வோருடனான எங்கள் உறவை வலுப்படுத்தவும் அவர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கவும் உதவியது,” என்றார்.

அதன் தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் நுகர்வோர் மைய அணுகுமுறையுடன், vivo உலக சந்தையில் ஒரு முன்னணி நிறுவனமாக இருந்து வருகின்றது. 2020 ஆம் ஆண்டு முழுவதும் தொழிற்துறைகளுக்கு கடினமாக இருந்தபோதிலும், விவோ, அதன் விரைவான வணிக மூலோபாயத்துடன், சந்தையில் வேகத்தை அதிகரித்து வெற்றிகரமான முடிவுகளைக் கண்டது. GFK அறிக்கையின்படி, vivo 27% சந்தைப் பங்கைக் கொண்டிருந்ததுடன், கடந்த ஆண்டு 10% வருடாந்த வளர்ச்சியை அடைந்த அதேவேளை, இந்தத் தொழிற்துறை 17% சுருக்கமடைந்தது.

இந்த வர்த்தகநாமமானது தனது தயாரிப்பு வரிசைகளை விரிவுபடுத்துவதற்கும் பல விலை புள்ளிகளில் சாதனங்களைத் தொடங்குவதற்கும் மும்முரமான திட்டங்களைக் கொண்டுள்ளது.

இந்த ஆண்டு ப்ரீமியம் சலுகைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் ப்ரீமியம் பிரிவில் தனது நிலையை வலுப்படுத்தவதை vivo நோக்கமாகக் கொண்டுள்ளது. நுகர்வோர் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் புரட்சிகரமான புதுமைகளை அறிமுகப்படுத்துவதில் அவர்கள் தொடர்ந்து கவனம் செலுத்துவார்கள்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*