முன்னணி உலகளாவிய ஸ்மார்ட்போன் வர்த்தகநாமமான vivo, 2021 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் சீனாவின் ஸ்மார்ட்போன் சந்தையில் முதலிடத்தைப் பெற்றுள்ளது. சீனாவின் ஸ்மார்ட்போன் விற்பனையில் 23% சந்தைப் பங்கையும் 21% வருடாந்த வளர்ச்சி விகிதத்தையும் கொண்டுள்ளது. Counterpoint Research’s Monthly Market Pulse Service (கவுண்டர்பொயிண்ட் ஆய்வின் மாதாந்த சந்தை நிலவர நிலைமைகளின் படி) இற்கு அமைய அதன் தயாரிப்பு வகைகள், முக்கிய விலைப் பிரிவின் அடிப்படையில் தொடர்ந்து அதன் நிலையை பேணுவதால் vivo முதலிடத்தைப் பெற்றுள்ளது.
இது தவிர, 2021 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் 10% சந்தைப் பங்குடன் முதல் முறையாக உலகளாவிய ஸ்மார்ட்போன் ஏற்றுமதியில் vivo நான்காவது இடத்திற்கு உயர்ந்துள்ளதாக Canalys தெரிவித்துள்ளது. Canalys இன் முந்தைய காலாண்டு புள்ளி விபரங்களின் அடிப்படையில், கடந்த 4 காலாண்டுகளில் உலகளாவிய ஸ்மார்ட்போன் ஏற்றுமதிகளில் vivo முதல் ஐந்து இடங்களுக்குள் இருந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இது 2021 இரண்டாம் காலாண்டில் சீனாவின் ஸ்மார்ட்போன் சந்தையில் முதலிடத்தையும் பிடித்துள்ளது. IDC Worldwide Quarterly Mobile Phone Tracker (IDC உலகளாவிய காலாண்டு மொபைல் போன் பின்தொடரல்) இற்கு அமைய, வலுவான வளர்ச்சி வேகத்தை அது பேணி வருகிறது.
உள்ளூர் மனநிலை, உள்ளூர் கலாசாரம் மற்றும் முகாமைத்துவம் பற்றிய அதன் புரிதலை மேம்படுத்துவதன் மூலம், vivo தொடர்ந்து அதிக சந்தைகளுக்கு விரிவடைந்து அதன் உலகமயமாக்கலை துரிதப்படுத்தி வருகிறது. தற்போதைய நிலவரப்படி, vivo அதன் விற்பனை வலையமைப்பை 50 இற்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் வியாபித்துள்ளதுடன், உலகளாவிய ரீதியல் 400 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களால் விரும்பப்படும் தரக்குறியீடாகவும் காணப்படுகின்றது.
Leave a Reply