சரியான சூழ்நிலையில் சரியான தொழில்நுட்பத்தைக் கண்டறிய புத்தாக்கமானன தீர்வுகளை அறிமுகப்படுத்தும் Huawei

பெங்கொக்கில் இடம்பெறும் HUAWEI CONNECT 2022 இன் இரண்டாவது நாளில், சரியான சூழ்நிலையில் சரியான தொழில்நுட்பத்தைக் கண்டுபிடிப்பதன் மூலம் தொழில்துறை டிஜிட்டல் மயமாக்கலை இயக்க புத்தாக்கமான உட்கட்டமைப்பு தீர்வுகளை Huawei அறிமுகப்படுத்தியது. ‘Innovative Infrastructure to Unleash Digital’ (டிஜிட்டலைக் கட்டவிழ்த்துவிட புத்தாக்கமான உட்கட்டமைப்பு) எனும் கருப்பொருளை மையமாக வைத்து தொழில்துறை பங்குதாரர்கள் ஒன்று கூடி, விவாதங்களை மேற்கொண்டதோடு, தொழில்துறை டிஜிட்டல் மயமாக்கலுக்கான எதிர்காலத்தை நோக்கிய திசைகள் மற்றும் வாய்ப்புகள் தொடர்பில் ஆராய்ந்தனர். டிஜிட்டல் மயமாக்கத்திற்காக முயற்சிகளை மேற்கொள்ளும் பல்வேறு தொழில்துறைகளின் சவால்களை அவர்கள் இங்கு பகுப்பாய்வு செய்ததோடு, இந்த சவால்களை எதிர்கொள்ள உதவும் வகையில் அதன் தொழில்நுட்ப வலிமையால் ஆதரிக்கப்படும் தீர்வுகளை Huawei அறிமுகப்படுத்தியது.

சரியான சூழ்நிலைக்கான சரியான தொழில்நுட்பம்: டிஜிட்டல் மயமாக்கலின் ‘கடைசி மைல் கல்லை’ அடைவதை எளிதாக்குகிறது

‘தொழில்துறையை மேம்படுத்துதல், மதிப்பை உருவாக்குதல்’ எனும் தனது முக்கிய உரையில், Huawei Enterprise BG இன் தலைவர் Ryan Ding கருத்து வெளியிடுகையில், “ஆழமான டிஜிட்டல் மாற்றம் நிறுவனங்களை எப்போதும் மாறிவரும் உலகத்துடன் சிறப்பாக மாற்றியமைக்க உதவுகின்றது. சரியான சூழ்நிலையில், வாடிக்கையாளர்களின் டிஜிட்டல் மாற்றத்தை மேம்படுத்துவதற்கு ஆதரவளிக்கவும், டிஜிட்டல் சக்தியைக் கட்டவிழ்த்துவிடவும், சரியான தொழில்நுட்பத்தைக் கண்டறிய Huawei எமது கூட்டாளர்களுடன் நெருக்கமாகச் செயற்படுகிறது.” என்றார்.

டிஜிட்டல் சக்தியை வெளிக்கொணர முக்கிய புத்தாக்கமான தொழில்நுட்பங்கள் மற்றும் வலுவான உட்கட்டமைப்பு

சரியான சூழ்நிலையில் சரியான தொழில்நுட்பத்தைக் கண்டறிவதில் multi-tech synergy எவ்வாறு முக்கியமானது என்பது பற்றி Huawei Enterprise BG இன் பிரதித் தலைவர் Bob Chen ‘புத்தாக்கமான டிஜிட்டல் உட்கட்டமைப்பு டிஜிட்டல் மாற்றத்தை துரிதப்படுத்துகிறது’ எனும் தனது முக்கிய உரையில் கருத்து வெளியிடுகையில், “டிஜிட்டல் மாற்றத்தின் மையத்தில் தரவு காணப்படுகின்றது. அத்துடன், தரவு உட்செலுத்தல், பரிமாற்றம், சேமிப்பு, பகுப்பாய்வு ஆகியவை இதன் முக்கிய படிகளாகும். Full-stack தயாரிப்புகள் மற்றும் தயாரிப்பு வகைகளை Huawei ஆதரிக்கிறது. ஒரு முனையிலிருந்து மறு முனை வரையிலான தரவு செயலாக்கம், வாடிக்கையாளர்களின் டிஜிட்டல் மாற்றத்தை துரிதப்படுத்துகிறது.” என்றார்.

Huawei Empower Program: உலகளாவிய கூட்டாளர்களுக்கு செழிப்பான டிஜிட்டல் சூழல் தொகுதியை உருவாக்குதல்

இந்நிகழ்வில், Huawei Empower Program (Huawei அதிகாரமளித்தல் திட்டத்தை) Huawei அறிமுகப்படுத்தியது. இது உலகளாவிய கூட்டாளர்களுக்கு ஒரு செழிப்பான டிஜிட்டல் சூழல் தொகுதியை உருவாக்க உதவும் நோக்கம் கொண்டது. இத்திட்டத்தில், OpenLabs மூலம் கூட்டாளர்களுடன் இணைந்து கூட்டு புத்தாக்க கண்டுபிடிப்புகளை Huawei மேற்கொள்ளும் என்பதுடன்,  ஒரு புதிய கட்டமைப்பு, ஒரு புதிய திட்டம், ஒரு ஒருங்கிணைந்த தளத்துடன் கூட்டாளர்களுக்கு அதிகாரம் அளித்து, Huawei ICT Academy மற்றும் Huawei Authorized Learning Partner (HALP) திட்டங்கள் மூலம் திறமையாளர்கள் குழு உருவாக்கப்படுகின்றது. எதிர்வரும் 3 வருடங்களில் உலகளாவிய பங்காளிகளுக்கு ஆதரவளிப்பதற்காக, இத்திட்டத்தில் 300 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்ய இருப்பதாக Huawei அறிவித்துள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*